search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி"

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டிக்கு, ஓசூரில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். #ministerbalakrishnareddy
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியை நியமனம் செய்து, அ.தி,மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டனர்.

    இதையடுத்து, மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி நேற்று மாலை ஓசூர் வந்தார்.

    அவருக்கு, ஓசூர் நகர செயலாளர் நாராயணன், ஒன்றிய துணை செயலாளர் ஜெயராம் ஆகியோர் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், மேள, தாள வாத்திய முழக்கத்துடனும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், ஓசூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் நடராஜன், வக்கீல் ஜீவானந்தம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வாசுதேவன், உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர். 

    பழைய கிருஷ்ணகிரி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    இதையடுத்து, பர்கூர் எம்.எல்.ஏ. சி.வி. ராஜேந்திரன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பாலகிருஷ்ணாரெட்டியை வாழ்த்தி பேசினார்கள். பின்னர் நன்றி தெரிவித்து பாலகிருஷ்ணரெட்டி பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. பெருமாள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். #ministerbalakrishnareddy 
    பாகலூரில் மண்டல அளவிலான பெண்கள் கபடி போட்டிகளை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தொடங்கி வைத்தார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில், சேலம் மண்டல அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பாகலூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, கபடி வீராங்கனையருக்கு சீருடைகளை வழங்கி போட்டியினை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, பாகலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை புத்திலிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், சேலம், சங்ககிரி, கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில், மூத்தோர், மேல் மூத்தோர் ஆகிய பிரிவுகளில் 10 அணிகளை சேர்ந்த 120 மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளை தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

    மேலும் இந்த நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயராம் மற்றும் முனிராஜ், ரவிக்குமார், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிகள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
    ஓசூர் அருகே பெக்கிலி கிராமத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி திறந்து வைத்தார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வெங்கடேசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெக்கிலி கிராமத்தில், ரூ.11 லட்சம் மதிப்பில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். 

    இந்நிகழ்ச்சிக்கு, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரபாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    மேலும் இதில், சூளகிரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத், மாவட்ட பிரதிநிதி சிட்டிஜெகதீசன், ஓசூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் வாசுதேவன், செல்வராஜ், தாஜுத்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×